Tuesday, 3 January 2012

18. Nappinnai the mediatress, is pleaded to open the doors.

செவ்வாய் ஜனவரி,3, 2012
மார்கழி 18, கர வருடம்

திருப்பாவை-பாடல் - 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.
விளக்கம்: பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

Oh! Daughter-in-law of Nandagopala-
        Who hath a shoulder mighty, never a fleer
     A valiant tusker emitting vigour; atop jasmine arcade
        Again 'n' again flock of larks had cooed;
     Nappinnai! Thy hair perfume fragrant, door  thou  open!
        Cock come around, hath crowed with rigour;
     Thou art asleep, ball agrip, as we sing thy groom;
        Come along! Throw open delight'd;
        To clang thy bangle bright,
        In pinky lotus hand a sight;
        Listen and consider our damsel.

திருவெம்பாவை -பாடல் - 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.
விளக்கம்: ஆண் இனம், பெண்ணினம் நீங்கலாக அலி என்ற இனம் இருக்கிறது. இறைப்படைப்பின் அதிசயம் அது. அதனால் தான் அவர்களை "திருநங்கை என பெயர் சூட்டி அவர்களைக் கவுரவித்துள்ளோம். இறைப் படைப்பில் எதுவுமே கேலிக்குரியதல்ல. எல்லாம் அவன் செயல். இறைவனே அலியாக இருக்கும் போது, மனிதப்படைப்பில் இருந்தாலென்ன! எல்லா உயிர்களையும் பரம்பொருளாகக் காண வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

Meaning:
As the heaps of precious gems on the crowns of the celestial powers lose their radiance, when they go to salute the feet lotuses of the Lord of aNNAmalai, the stars fade away with their cold luminance when the one in the eye - Sun comes to remove the darkness. Being female, male, neuter, rays filled sky, earth and Being apart from all these, One who stands as the nectar for the eyes, singing His ornated foot, Oh girl, bathe in this floral stream. 

Monday, 2 January 2012

17. Awakening Nandagopala, Yasoda, Krishna and Balarama.

திங்கள் ஜனவரி,2, 2012
மார்கழி 17, கர வருடம்


திருப்பாவை-பாடல் - 17


அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே,
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.


பொருள்: ஆடை, தண்ணீர், அன்னதானம்செய்யும் தலைவரான நந்தகோபரே! எழுவீராக. கொடியிடை பெண்களுக்கு எல்லாம் தலைவியும், இரக்கசுபாவம் கொண்டவளும், மங்கள தீபம் முகத்துடன் பிரகாசிப்பவளுமான யசோதையே! எழுவாயாக. விண்ணையும் தாண்டி திருவடிகளால் உலகளந்த தேவர் தலைவனான கண்ணனே! எழுவாயாக. சொக்கத்தங்க சிலம்பணிந்த செல்வத்திருமகனே! பலராமனே! நீயும், உன் தம்பியும் உடனே எழ வேண்டும்.விளக்கம்: திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் மூன்று பாடங்களில் சிறப்பிக்கிறாள் ஆண்டாள்.


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி' என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி' என்றும் சொல்கிறாள். மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். கர்வம் அடங்கினால் அந்த நல்லவன் இறைவனை அடைவது உறுதி என்பதால், நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். "தான்' என்ற ஆணவமே இறைவனை அடைய தடைக்கல்லாக உள்ளது. அதை விட்டுவிடு என்று அறிவுறுத்துகிறாள் ஆண்டாள்.


Attire, water and food thou donate  
        Our patron Nandagopala arise!
     Sprout of a creeing plant! Light of our clan!
        Our patroness Yasoda, get enlighten'd!
     Grown piercing the cosmos, Thou had meted this earth.
        King of Angels! Thou shalt arise!
     Shed Thy sleep, drowse no more,
        Baladeva wealthy! Thy foot bright adorn'd
        By gold anklet of a victor;
        Junior and thyself our benefactor
        Discard drowsing! Arise and consider our damsel.
திருவெம்பாவை -பாடல் - 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி! நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!


பொருள்: தோழியரே! நாராயணன், பிரம்மா, பிற தேவர்களிடம் கிடைக்காத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், வீடுகள் தோறும் எழுந்தருளு கிறான். தாமரை திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அவனை வணங்கி நலம் பெறும் பொருட்டு, இந்த தாமரை பொய்கையில் நீராடி மகிழ்வோம்.விளக்கம்: இறைவனை "சேவகன்' என்கிறார் மாணிக்கவாசகர். ஆம்..அவனை அணுகாத வரை தான் அவன் நமக்கு எஜமானன். அணுகி விட்டால், அவனுக்கு நாம் எஜமானன். அவன் சேவகன் போல் சேவை செய்ய நம்மருகே வந்து கைகட்டி நிற்பான்.

Meaning:
With the red eyed one, with the direction faced one, with the dhEvAs - the joy that is not present anywhere, giving that joy to us, bee eating plaited girl, the Red one who pampers us, residing and blessing in all our homes, blessing us giving the red lotus like Golden foot, Charming eyed king, the great Nectar for we slaves, our Lord, singing Him with the goodness booming bathe in the lotus floral water. 

Sunday, 1 January 2012

16. Requesting the guard of the temple to open the doors

ஞாயிறு ஜனவரி,1, 2012
மார்கழி 16, கர வருடம்

 om namo narayana 
 HAPPY NEW YEAR 2012

திருப்பாவை
பாடல் - 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்@கலோர் எம்பாவாய்.

பொருள்: எங்கள் தலைவர் நந்தகோபனின், தோரணம் கட்டிய அரண்மனையைப் பாதுகாப்பவனே! ஆயர்குல பெண்களான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திற. மாயங்கள் புரிபவனும், கருமை நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு அருள் செய்வதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதற்காக தூய மனதுடன் வந்துள்ளோம். அவனை எழுப்பும் பாடல்களை பாட உள்ளோம். "முடியாது' என முதலிலேயே சொல்லி விடாதே. எங்களுக்காக கதவைத் திற.

விளக்கம்: "தூயோமாய் வந்தோம்' என்கிறாள் ஆண்டாள். கண்ணனை வணங்க பூ, பழம் இவற்றையெல்லாம் கொண்டு செல்வதால் பயனில்லை. அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய மனதை! அதையே ஆயர் குல பெண்கள் கொண்டு சென்றனர். நாமும் தூய மனதுடன் கோயிலுக்குச் செல்வோம்.

 Thou guarding the temple of Nandagopala -
         Who is supreme of our clan;
     Guard of entrance with flag staff ostensive
         And festoon suspended across;
     Open latch of jewel-studded door;
         The Elusive, gem colour'd had plan;
     Vouched yesternight Ayarpadi lass, the drum to knock;
         We've come immaculate to pray arouse;
         Thou shalt not postpone and pronounce
         Open the lovely, befit door at once;
          Listen and consider our damsel.


திருவெண்பாவை
பாடல்-16
முன்னிக்கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பொருள்: கடல் நீரை குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள், சிவனின் தேவியான பார்வதியைப் போல் கருத்திருக்கின்றன. அவளது சிறிய இடை மின்னல் போல் வளைந்திருக்கிறது . எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள சிலம்புகள் எழுப்பும் ஒலி போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைத்திருக்கிறது. எங்களை ஆட்கொண்டவளும், சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு அருள் சுரப்பாள். அவளது அருள் மழை போல், மழையே! நீயும் விடாமல் பெய்வாயாக.

விளக்கம்: நீரின்றி அமையாது உலகு. நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இறைவனுடனும், அம்பாளுடனும் நீர் நிலைகளை ஒப்பிட்டிருக்கிறார் மாணிக்கவாசகர். இடி, மின்னல், அம்பாளின் அருள் ஆகியவற்றை சலங்கை, இடை, மழை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
 Meaning:
Earlier raising condensing the sea, appearing like the Lordess, shining and booming like the waist of Her who rules us, clinging like the clings of the golden anklet over the foot of our Lordess, appearing as a bow like Her eyebrow, like the grace She comes forward and gives first to the lovers of our Lord who is inseparable from Her who enslaved us, shower, Oh rain ! 

Saturday, 31 December 2011

DECEMBER 5th WEEK. PARAYANAM



850th week

DECEMBER 5th. WEEK. PARAYANAM

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத சுவாமி நமஹா  :


    
31-12-2011 TIME 7.30 PM
 (this WEEK PARAYANAM)
ஸ்ரீ பத்ரி நாராயணன்  அவர்கள் அகத்தில் .   
(IN THE RESIDENCE OF  Mr. V BADRI NARAYANAN). 
B-9 18-C UDAIGIRI-II, SECTOR-34, NOIDA 

ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா


15. A typical Vaishnavite, this girl allows herself to be blamed.

சனி டிசம்பர், 31, 2011
மார்கழி, 15, கர வருடம்


திருப்பாவை பாடல் - 15


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்: ""இளமையான கிளியே! உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், எப்படியெல்லாமோ அழைத்தும் இன்னும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.


அந்த தோழி, ""கோபப்படாதீர்கள்! இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள்.உடனே தோழிகள், ""உன்னுடைய @பச்” மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது கோபிக்காதே என்கிறாயே,'' என்று அதட்டினர்.அதற்கு அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை என்பது நிஜமே! நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருந்து விட்டு போங்கள்,'' என்று பதிலுக்கு கோபிக்கிறாள்.


""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன சிறப்பு உன்னிடம் இருக்கிறது?'' என்று மீண்டும் கடிகிறார்கள் தோழிகள்.வீட்டுக்குள் இருந்தவளும் விடவில்லை. ""நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?'' என்கிறாள்
.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே கிளம்பு,'' என்கிறார்கள்.

விளக்கம்: இந்தப் பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமையாக பாடியிருக்கிறாள் ஆண்டாள். தோழிகளும் தான் எவ்வளவு பொறுப்பார்கள்! கோபத்தில் தோழியைத் திட்டித் தீர்த்து விட்டார்கள். கோபத்தில் கோபமான சம்பவங்கள் தானே வெளிப்படும். இந்தப்பாட்டிலும், கண்ணன் கோபத்துடன் போரிட்ட சம்பவங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

“Hey, tiny parrot, yet asleep;”
         “Don't shriek, girls! I have come”
     “Thou are adept in essays,
          Erelong thy tongue we know”
     “You are eloquent or let myself be;”
         “Lo! Would 'st thou move out soon?
     What's that special in thee?” ”Have all come?”
         “Have come, count thou apprehensive”
         We will sing the Elusive
         Who had crush'd the tusker mighty massive
         And shatter'd hostile; listen and consider, our damsel.

திருவெம்பாவை பாடல் - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.


பொருள்: மார்புக்கச்சையும், ஆபரணமும் அணிந்த பெண்களே! நம் தோழி "எம்பெருமானே' என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை விடாமல் பேசுவாள். அப்போது அவளது கண்களில் கண்ணீர் பெருகும். அந்த பரவசத்தில் இருந்து அவளால் மீண்டும் இயல்புநிலைக்கு வர முடியாமல் போகும்.


விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்று பித்துப்பிடித்து நிற்பாள்.அவளைப் போலவே, நம்மை ஆட்கொள்ளக் காத்திருக்கும் சிவனின் தாள் பணிவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


விளக்கம்: சிரித்தாலும் அழுதாலும் கண்ணீர் வரும். பக்திப்பரவசத்தில் மூழ்கினாலும் கண்ணீர் பெருகும் என்பதற்கு இந்தப் பாடல் எடுத்துக்காட்டு.

Meaning:
Now and then she utters, "My Lord", thus her mouth never relent in the praise of the glory of Our Lord ! With the mind rejoicing, never stopping long streams of tears wetting the eye, not even once coming to this world, not bowing down to the celestial powers, to the Emperor one becomes mad like this. One who takes slaves like this, that Proficient's foot, Oh girls of ornated breasts, let us sing and swim in the floral stream. 

Friday, 30 December 2011

14. Though promised earlier to arouse all, this girl is blamed.

வெள்ளி டிசம்பர்,30, 2011
மார்கழி 14, கர வருடம்



திருப்பாவை
பாடல் - 14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பின் காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பொருள்: நாளை காலையில் முன்னதாகவே வந்து உங்களை எழுப்புவேன் என்று வீரம் பேசியவளே! சொன்ன சொல் தவறியதற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர் மலர்ந்தும், ஆம்பல் தலை கவிழ்ந்தும் விட்டது. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, சங்கு முழக்க சென்று கொண்டிருக்கின்றனர். சங்கும் சக்கரமும் ஏந்திய வீரமிக்கவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனை வணங்க, இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்: ஒன்றைச் சொன்னால், அதை செய்தே தீர வேண்டும். வாக்குறுதி கொடுப்பதும், பிறகு ஒன்றுமே தெரியாதது போல் அப்பாவித்தனமாக நடிப்பதும் இறைவனுக்கு ஏற்புடையதல்ல என்பதும் இப்பாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

 In your backyard garden pond
        Lotus hath opened its petals benign;
     Lily hath closed its petals as a cone;
        Lo! Brick power hue attir'd
     White-toothed monks are afoot
        To trumpet conch in their temple divine;
     Vouched to arouse us, pompously you mouth
        Vivacious your tongue lassie unabashed;
        His eye is a la lotus; and arm a hillock fine
        Toting conch and wheel that shines.
        Arise, sing! Listen and consider, our damsel.
திருவெண்பாவை- பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள்: காதணிகள் ஆட, தங்கநகைகள் ஆட, கூந்தல் ஆட, அக்கூந்தலில் சூடியுள்ளமலர்களை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவனின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லுங்கள். ஜோதி வடிவாய் காட்சி தரும் சிவனின் வீரச்செயல்களை பேசுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி கூறுங்கள். முதலும் முடிவும் இல்லாத இறைவனின் புகழ் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை விலக்கும், அவனது திருவடி சிறப்பு பற்றி பேசிக்கொண்டே நீராடுங்கள்.

விளக்கம்: மார்கழியில் கத்துகிற ஒலிபெருக்கி தேவையில்லை. "நமசிவாய' என்ற மந்திரம் நம் வாயில் இருந்து ஒலிக்க வேண்டும். காலையில் புனித நீராடும் போது, அந்த சிவனின் திருநாமங்களும், அவனது சிறப்புகளுமே நினைவுக்கு வர வேண்டும். மற்ற சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்தால் தான், புனித நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.
Meaning:
The earring dancing, worn ornaments dancing, the Lady's plait dancing, the crowd of gasps dancing, bathing in the chill water, singing the Tiny Hall, singing the Meaning of vEdhAs, singing the Being of that, singing the nature of the Luminance, singing the enclading bunch of flower konRai, singing the nature of the Source, singing the Being of the end, singing the nature of the foot of the Lady who brought us up, bathe. 

Thursday, 29 December 2011

13. A girl with charming eyes, yet ego centric is awakened.

வியாழன் டிசம்பர், 29, 2011
மார்கழி 13, கர வருடம்

 

திருப்பாவை பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பறவையாய் உருமாறி வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழித்தவன், ராவணனின் தலையைக் கொய்தவன் நம் நாராயணன். அவனது புகழைப் பாடியபடியே, தோழிகள் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து, வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் பாடுகின்றன. தாமரை மலர் கண்களையுடைய தோழியே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறி தெரிந்தும், குளிர்ந்த நீரில் நீச்சலடித்து நீராட வராமல் என்ன செய்கிறாய்? நல்மாதமான மார்கழியில் அவனை வணங்குவது சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்: "காலம் மாறி விட்டது என்று யாராவது சொன்னால், அதனை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், நேரத்தை வீணடிப்பது ஒரு வகை திருட்டு என்கிறாள் ஆண்டாள். அதையே "கள்ளம் தவிர்ந்து' என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் காலத்தின் அருமையை உணர்த்தியுள்ளனர் நம் பெரியோர்.

Singing the glory of Him
       Who split the bird's bill and kill'd
    And Him who pluck'd the wicked demon as a weed;
       Girlies all reach'd the site of deity;
    Venus ascended and Jupiter, had slept sunk;
       Birds too clanged behold, belle gild:
    Thy eye, is a la flower or deer  flirting?
       Yet asleep in bed,
       Enjoin to dip and shiver in bath cold;
       Shed off thy stealth untold
       This  day is  auspicious, consider  our damsel.

திருவெம்பாவை பாடல் - 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


விளக்கம்: தோழியே! நாம் குளிக்கும் குளத்தின் நடுவில் கரிய குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர்களும் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் மிதக்கின்றன. தங்கள் அழுக்கை களைய மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய' என்ற மந்திரத்தை மனதார சொல்கிறார்கள். இந்தக் குளம் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் ஒலிக்க, மார்புகள் விம்ம பாய்ந்து சென்று நீராடுவோம்.


விளக்கம்: குளத்திலுள்ள கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும், மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது கருத்து.

Meaning:
Because of the greeny dark kuvaLai flower, because of the fresh bud of the red lotus, because of the buzzing sound of the small-bodied creatures, this brimming pond appears, with the arrival and taking refuge of those who want to wash away their impurities, like our Lordess and our King. Jumping into this pond of lotus floral spring with our conches roaring, anklets clinging each other, breasts booming, bathing pond booming, swim in the pond.