Monday, 9 January 2012

24. His feet, energy, glory, generosity, nobility, bravery and spike are hailed.

திங்கள் ஜனவரி 9, 2012
மார்கழி 24, கர வருடம்
திருப்பாவை - பாடல் - 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.


பொருள்: மூன்றடிகளால் உலகளந்த உன் திருவடிகளுக்கு வணக்கம். தென்னிலங்கை ராவணனை வெற்றி கொள்ள ராமனாய் வந்த உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்திய உன் புகழுக்கு
வந்தனம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை விளாமர வடிவில் வந்த கபித்தாசூரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு வணக்கம். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை காத்த உன் இரக்க குணத்துக்கு வந்தனம். பகைவர்களை அழித்த உன் வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு நாங்கள் வந்து
உள்ளோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு அருள்செய்.


விளக்கம்: பள்ளிக்குப் புறப்படும் முன், இந்த பாசுரத்தை குழந்தைகள் தினமும் பாராயணம் செய்தால் படிப்பில் திறமை, நடைமுறை வாழ்விலுள்ள சிக்கல்களை எதிர்க்கும் தைரியம் ஏற்படும்.

All-hail, Thy foot meted this earth thence;
All-hail, Thy energy went thither, conquered Lanka South;
All-hail, Thy glory kick'd the wheel to ruins;
All-hail, Thy foot the calf, as a throw-stick toss'd;
All-hail, Thy generosity held the hillock an umbrella;
All-hail, Thy spike won and shatter'd hostile uncouth
And so on singing Thy bravery,
Revering Thy laurel factual,
To obtain the desire auspicious
Have come this day, we ambitious
Yield! listen and consider our damsel.

திருப்பள்ளியெழுச்சி-பாடல் - 4

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆட்கொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.



பொருள்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலையில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங்களால் உன்னை வணங்குவோரும், தமிழ்
தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் மறுபுறமும் உன் சிறப்பைப் பாடிக்
கொண்டிருக்கிறார்கள்.



"நமசிவாய' என்ற நாமம் சொல்லியபடி மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்பவர்களும் ஒருபுறம் நிற்கிறார்கள். தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். எனது இறைவனே! இவர்களது பக்தியின் முன் எனது பக்தி மிகச்சாதாரணம். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டவனே! பள்ளியில் இருந்து நீ எழுந்தருள வேண்டும்.



விளக்கம்: இறைவழிபாட்டில் இறங்கி விட்டால், அதைத் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது என்பதை இந்தப் பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

Sunday, 8 January 2012

23. Krishna is requested to sit down on a throne and inquire about their grievances.

திருப்பாவை- பாடல் - 23


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திலிருந்து, யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொருள்: மழைக்காலத்தில் மலையில் உள்ள குகையில் உறங்கும் வீரம் மிக்க சிங்கம், கண்களில் நெருப்புப்பொறி பறக்க, நாற்புறமும் நடமாடி, பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புவது போல, காயாம்பூ நிறத்தைஉடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு வெளியே வருவாயாக. மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதைக் கேட்டு, கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்: இறைவனிடம் கோரிக்கை வைப்பது நமது உரிமை. அந்த கோரிக்கை நியாயமானதாக நம் மனதுக்குப் படலாம். ஆனால், இறைவன் அதை வேண்டாம் என நினைத்து விட்டால் நமக்கு கிடைப்பதில்லை. எனவே, அவனிடம், ""நீ என்ன தர விரும்புகிறாயோ, அதைக் கொடு,'' என பிரார்த்திக்க வேண்டும். அதை அவன் ஆராய்ந்து அருளுவான்.

As would a fierce lion in a mountain den Stay along in winter, lie asleep gang with, Enlighten'd, open eye, emit fire, mane erect Stretch in all direction; Oh! Bilberry-hued; Thou shalt roar! Start with a bang, This ward move from Thy temple forthwith, Settle on carved out throne exquisite, We have come unto Thee to woo; Ponder over our requisite; Bestow grace, the desire implicit Listen and consider, our damsel.

திருப்பள்ளியெழுச்சி-பாடல் - 3

கூவின பூங்குயில், கூவின கோழி
குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணைக்காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்! எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! சூர்யோதத்தை அறிவிக்கும் வகையில் குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகள் கீரிச்சிடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

விளக்கம்: சூரியன் உதித்து விட்டால், நட்சத்திர ஒளி அதனுடன் ஒன்றிப்போய் விடுகிறது. அதுபோல், நம் மனம் இறைவனுடன் ஒன்றிப் போய் விட வேண்டும். இதுவே நிஜமான பக்தி என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது.

Saturday, 7 January 2012

22. The girls have approached as Kings, shedding their ego and to do menial Service.

சனி ,ஜனவரி,7, 2012

மார்கழி ,22, கர வருடம்


திருப்பாவை : பாடல் - 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப்பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல்
நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: ""எங்களை விட சிறந்த வீரர்கள் யாருமில்லை,'' என தங்களைப் பற்றியே பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் நீ பள்ளி கொண்டு உள்ள கட்டிலைச் சுற்றிலும் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் தரிசனத்துக்காக காத்திருக்கிறோம். சிறிய மணியின் வாய்போலவும், தாமரைப்பூ மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடும்.விளக்கம்: குசேலன் வந்தார் கண்ணனைக் காண! அவனது கடைக்கண் பார்வைக்காக ஏங்கினார். கண்ணனோ, அந்த பக்தனை ஆரத்தழுவி, அருகில் அமர்த்தி உணவூட்ட ஆரம்பித்து விட்டான். கிழிசல் துண்டில் முடிந்து வந்த அவலை சாப்பிட்டு, குசேலனைக் குபேரனாக்கி விட்டான். கடவுளின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். நம் வாழ்வு மலர்ந்து விடும்.

Beneath Thy bedside have we gather'd
As kings on this large handsome earth
Would crowd around, sans ego;
Wouldst Thou glance at us, with Thy
Eye, a la ankle trinket, lotus blooming,
Sun and moon awake at a time in mirth!
If Thou glimpse with eyes two beautiful,
By little and little on us tarnish'd
Sin and curse shall vanish
From we the girls vanquish'd;
Listen and consider, our damsel.


திருப்பள்ளியெழுச்சி : பாடல் - 22


அருணன் இந்திரன் திசை அணுகினன்
இருள்போய்அகன்றது உதயம் நின்மலர்த்திரு
முகத்தின்கருணையின் சூரியன் எழுவெழ
நயனக்கடிமலர் மலரமற்று அண்ணல்
அங்கண்ணாம்திரள்நிறை யறுபதம்
முரல்வன இவையோர்திருப்பெருந்
துறையுறை சிவபெருமானேஅருள்நிதி
தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான். உன் முகத்தில் பொங்கும் கருணை ஒளியைப் போல சூரியனும் எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உன் கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. வண்டுகள் அவற்றில் தேன் குடிக்க வருகின்றன. இந்த இனிய காலைப்பொழுதில், அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக. விளக்கம்: தாமரை சிவன், வண்டுகள் பக்தர்கள். தாமரை மலர்ந்ததும் வண்டுகள் தேன் குடிக்க வருவது போல், பக்தர்களாகிய வண்டுகள், அவன் திருவடியைத் தேடி வருகிறார்கள் என்கிறார் மாணிக்கவாசகர்.

Friday, 6 January 2012

851th week parayanam 07th-01-2012

ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

இந்த வாரம் சஹஸ்ரநாம  பாராயணம் ஸ்ரீ சுரேஷ்  அவாரகள் அகத்தில் நடை பெரும்

THIS WEEK WEEKLY PARAYANAM 851th WEEK 07TH JANUARY 2012

Sh  Suresh,
B-1/253 ARAVALI APARTMENT
SECTOR-34 NOIDA
 TIME 7.30 P.M.
ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண ஓம் நமோ நாராயண

21. The girls have come Lost to His qualities-beauty, compassion and love.

வெள்ளி ஜனவரி,6, 2012
மார்கழி 21, கர வருடம்

திருப்பாவை பாடல் - 21


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனே! எழுவாயாக. வேதங்களால் போற்றப்படுபவனே! பலசாலியே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! எழுவாயாக! உன்னை எதிர்த்த அரசர்கள் வலிமையிழந்து, உன் வீட்டு வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை வணங்குவதற்கு காத்திருக்கிறோம்.


விளக்கம்: கண்ணனுக்கு பயந்த மன்னர்கள், பயத்தால் அவனை வணங்கக்காத்திருந்தார்கள். இவ்வாறு இறைவனை வணங்குவதில் பயனில்லை. ஆனால், அவனது திருவடியே தஞ்சமென்று, ஆயர்குலப் பெண்கள் வந்தார்கள். இந்த ஆத்மார்த்த பக்தியையே இறைவன் விரும்புகிறான்.

In vessels receptile filled to brim,grand donor cows
Issue incessant flow of milk to counter flow;
Oh! Son of Nandagopala! Owner of such immense;
Get enlighten'd! Thou resolute, magnanimous,
Remain pre-eminent on this earth,
A beacon resplend aglow;
We have come lauding and hailing;
Forlorn, sans energy, and assiduous;
As would foes, at Thy gate unanimous,
Have gather'd to surrender to Thy foot glorious;
Arise! Listen and consider, our damsel.


திருப்பள்ளியெழுச்சி




புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !
பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு அதுபோன்ற
மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில்
எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக்
கண்டு, அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான
வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

Meaning:Praises, Oh The Thing that is the principal for my life ! It is dawn, hailing the floral feet with alike flowers, with the glorious smile in Your Rich Face blooming grace to us, (we) worship Your Rich foot. Oh Lord shiva residing at thirupperun^thuRai encircled by the lotuses of muddy petals blooming chill fields ! Oh, Owner of the Bull raised flag ! Oh, my Master !! my Lord ! Bless getting up !!

Thursday, 5 January 2012

20. Once again, the Divine Couple are aroused.

20. Once again, the Divine Couple are aroused.

வியாழன் டிசம்பர், 05, 2012
மார்கழி 20, கர வருடம்  



This Paasuram also explores about Sri Andal waking up a Paavai who is still sleeping.
"Hey cousin! As a result of this Noanbhu, we will get the final destiny - the Swargham (heaven). But, you are still sleeping. You are not coming out, but at least you can open your mouth and say something, but instead you are keeping up the silence. Thulasi (Thiruthuzhai) garland, which is found on the ThiruMaarbhu of Sri Krishnar is waiting for us to give the varam what we what. During the Sri Ramavathar, He conquered Kumbakarnan. He was famous for his sleep. Likewise, you are replicating him and did he give his great sleep to you? You are a great Paavai for us. So, don't sleep. Get us and join with us." Words and the meanings:Notruccheevarkkam Pugugindra Ammanaai :
'Chuvarkkam' means Heaven. If we perform this Paavai Noanbhu, going to Swargham (heaven) is assured. Naatrakkuzhai Mudi Narayanan :
This refers to the Thulasi being found along with the ThiruMaarbhu of Sriman Narayanan and it is said to have fragrance in nature.

திருவெம்பாவை  20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் 
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் 
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் 
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் 
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் 
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.
Meaning:
Praises, bless (us) Your flower of feet, the beginning ! 
Praises, bless Your red tendershoots, the end ! 
Praises to the Golden feet, the origin of all lives ! 
Praises to the Floral ornated feet, the pleasure of all lives ! 
Praises to the Parallel feet, the termination of all lives ! 
Praises to the Lotus not seen by vishNu and the four faced ! 
praises to the Golden flowers that bless us taking as slaves ! 
Praises ! Bathing in the mArkazi month !