Saturday, 7 January 2012

22. The girls have approached as Kings, shedding their ego and to do menial Service.

சனி ,ஜனவரி,7, 2012

மார்கழி ,22, கர வருடம்


திருப்பாவை : பாடல் - 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப்பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல்
நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: ""எங்களை விட சிறந்த வீரர்கள் யாருமில்லை,'' என தங்களைப் பற்றியே பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் நீ பள்ளி கொண்டு உள்ள கட்டிலைச் சுற்றிலும் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் தரிசனத்துக்காக காத்திருக்கிறோம். சிறிய மணியின் வாய்போலவும், தாமரைப்பூ மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடும்.விளக்கம்: குசேலன் வந்தார் கண்ணனைக் காண! அவனது கடைக்கண் பார்வைக்காக ஏங்கினார். கண்ணனோ, அந்த பக்தனை ஆரத்தழுவி, அருகில் அமர்த்தி உணவூட்ட ஆரம்பித்து விட்டான். கிழிசல் துண்டில் முடிந்து வந்த அவலை சாப்பிட்டு, குசேலனைக் குபேரனாக்கி விட்டான். கடவுளின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். நம் வாழ்வு மலர்ந்து விடும்.

Beneath Thy bedside have we gather'd
As kings on this large handsome earth
Would crowd around, sans ego;
Wouldst Thou glance at us, with Thy
Eye, a la ankle trinket, lotus blooming,
Sun and moon awake at a time in mirth!
If Thou glimpse with eyes two beautiful,
By little and little on us tarnish'd
Sin and curse shall vanish
From we the girls vanquish'd;
Listen and consider, our damsel.


திருப்பள்ளியெழுச்சி : பாடல் - 22


அருணன் இந்திரன் திசை அணுகினன்
இருள்போய்அகன்றது உதயம் நின்மலர்த்திரு
முகத்தின்கருணையின் சூரியன் எழுவெழ
நயனக்கடிமலர் மலரமற்று அண்ணல்
அங்கண்ணாம்திரள்நிறை யறுபதம்
முரல்வன இவையோர்திருப்பெருந்
துறையுறை சிவபெருமானேஅருள்நிதி
தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.


பொருள்: திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான். உன் முகத்தில் பொங்கும் கருணை ஒளியைப் போல சூரியனும் எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உன் கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. வண்டுகள் அவற்றில் தேன் குடிக்க வருகின்றன. இந்த இனிய காலைப்பொழுதில், அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக. விளக்கம்: தாமரை சிவன், வண்டுகள் பக்தர்கள். தாமரை மலர்ந்ததும் வண்டுகள் தேன் குடிக்க வருவது போல், பக்தர்களாகிய வண்டுகள், அவன் திருவடியைத் தேடி வருகிறார்கள் என்கிறார் மாணிக்கவாசகர்.

No comments:

Post a Comment