புதன் ஜனவரி,4, 2012
மார்கழி 19, கர வருடம்
திருப்பாவை-பாடல் - 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்;
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!
விளக்கம்: நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். வீரன் கொண்டுவரும் பொருளை வீரப்பத்தினி மிகவும் விரும்புவாள். அதுபோல், கம்சனால் ஏவப்பட்ட "குவலயாபீடம்' என்ற யானையோடு சண்டையிட்டு அதைக் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்து வந்தான். அந்த தந்தங்களினால் செய்யப்பட்ட கட்டிலில் நப்பின்னையும், கண்ணனும் உகந்து படுத்துள்ளனர். பாசுரத்தில் "கோடு' என்பது தந்தத்தைக் குறிக்கும்.
மங்களகரமாக குத்துவிளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக்கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் - கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து 'மாசுச:' (கவலைப்படாதே) என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னைதான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. இந்தப் பாசுரம் "திருவிடவெந்தை' என்ற திவ்ய தேசத்தை உணர்த்துகிறது. பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்துச் சொல்கிறது இந்தப் பாசுரம்.
.

| |
No comments:
Post a Comment