திங்கள் டிசம்பர், 26, 2011 மார்கழி 10, கர வருடம் திருப்பாவை-பாடல் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொன்னாõர்கள். நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பலின் இருப்பிடமே! கிடைத்தற்கரிய அணிகலனே! தடுமாற்றம் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா. விளக்கம்: கோயிலில் திருவிழா என்றால், இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே நிற்கிறோம். இது சுயநலம். நம்மோடு மற்றவர்களும் சேர்ந்து பார்க்க வேண்டும் என அவர்களுக்கும் இடம் கொடுத்தால், அது பொதுநலம். ஆண்டாள் தான் மட்டுமின்றி, எல்லாரும் இறைவனை அடைய வேண்டும் என்று அழைக்கிறாள். புறப்படுவோமா? You lady would fast until enter Heaven; If one wouldn't open entry, should she not speak? Adorn'd fragrant basil crown, Narayana virtuous Bestows the desire on our prayer; Of yore consigned Kumbakarna to death. Has that demon, lost in contest peak, Handed the grand sleep over unto thee? Lazy to the core Thou shalt precious decor திருவெம்பாவை 10பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10 அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன; அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்; ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே ! அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார் உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?! சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத; கோது - குற்றம்; பரிசு - வழி. 10. pAdhALam EzinuN^kIz choRkazivu pAdhamalar pOdhAr punaimudiyum ellAp poruLmudivE pEdhai orupAl thirumEni onRallan vEdhamudhal viNNOrum maNNun^ thudhiththAlum Odha ulavA oruthOzan thoNdaruLan kOdhil kulaththaran than kOyiR piNAppiLLaikAL Edhavan Ur EdhavanpEr Ar uRRar Ar ayalAr Edhavanaip pAdum parichElOr empAvAyMeaning: Even below the seven underneath worlds is the Beyond-words Flower of foot ! The Splendid Hair of floral fragrance is the end of all matters !! Female oneside, His Holy Form is not one. Beginning vEdhAs, even if the celestial powers and earth praise, Indescribable, that One Friend, residing in the hearts of His servants. The hara of flawless tradition. Which one is His town ? Which one is His name ? Who related and who not ? What is the way to sing Him ?! |
Monday, 26 December 2011
10. A girl with whom “Krishna Himself would fall in love”.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment