Tuesday, 20 December 2011

4th day Rain dear to Andal--exposition of Vishistadvaita


மார்கழி 4

.செவ்வாய், டிசம்பர்,20,

மார்கழி 4, கர வருடம் 
 
திருப்பாவை - பாடல் 3  ஆண்டாள் .
 Tamil


 Oh! Rain! Gracious alike ocean, pupil of my eye;
       Thou shalt never flout this attitude
    Enter sea, emerge replete, ascend a mass dark in space;
       Colour a la form of Lord Eternal, Let lightning flash
    Thunder shoot as wheel and dextrogyral
       In the hands of Padmanabha, His arms a fortitude;
    Brook no delay, force a cloud burst;
       Pour down as would darts from Sarnga lash
       To facilitate life on earth bright;
       And the Margali bath to our  delight;
       Listen and consider, our damsel.

திருவெம்பாவை - 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்.
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
""முத்து போல் பிரகாசிக்கும் பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா பொழுது விடியவில்லை?'' என்று கேலி செய்த பெண்களிடம், உறங்கியவள், "" கிளி போல் பேசும் எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்று கேட்டாள். எழுப்ப வந்தவர்கள்,""அடியே! இங்கே இருப்பவர்கள் எத்தனை பேர் என இனிமேல் தான் எண்ணிச் சொல்ல வேண்டும். அமரர்களைக் காப்பவராகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியாது. ஆகவே, நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக் கொள். நீ எதிர்பார்க்கும் அளவு பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு,'' என்று கேலி செய்தனர்.
விளக்கம்: யாரெல்லாம் கோயிலுக்குப் போகிறார்கள்? அங்கு செல்வதால் பலனடைந்தவர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் விசாரித்த பிறகு இறைவனை வணங்குவதால் பலனேதும் இல்லை. இவ்வகை பிரார்த்தனை சுயநலம்
சார்ந்ததாக அமையும். எதிர்பார்ப்பு ஏதுமின்றி, இறைவனை வணங்குவதில் முந்துபவரில் நீங்கள் முதன்மையாய் இருக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்பொருள்.


 
 
 ,.
.

No comments:

Post a Comment