வெள்ளி டிசம்பர் 23, 2011
மார்கழி 7, கர வருடம்
திருப்பாவை-பாடல் - 7
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பொருள்: தூக்கம் என்னும் பேயிடம் சிக்கியவளே! விடிந்ததால் வலியன்குருவிகள் கீச்சிடுகின்றன. அவை தங்கள் துணையுடன் பேசுகின்றன. இந்த ஒலி உன் காதில்
விழுகிறதா? நறுமணம் மிக்க கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் தயிர் கடையும் ஒலியும், அவர்களது கழுத்தில் அணிந்துள்ள மாங்கல்யம் ஒலியெழுப்புகிறதே! இதுவுமா கேட்கவில்லை! எங்கள் எல்லாரையும் நீராடலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னவளே! நாங்கள் நாராயணனான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்குகிறாயே! ஒளிமுகம் கொண்டவளே! வீட்டுக்கதவைத் திற.
விளக்கம்: இயற்கையை ரசிப்பதற்கென்றே விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும்.
பறவைகள் அங்குமிங்கும் பறப்பதையும், அவை உணவுதேடி அதிகாலையிலேயே தங்கள்
பணியைத் துவங்குவதைபார்த்து, ஐந்தறிவுள்ள அந்த ஜீவன்களிடம் மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்கிறாள் ஆண்டாள்.
Can't thou listen to the kingcrow mingled all around?
The clatter--’Keesu Keesu’, a medley
Gurgling noise of curd by churndash
Hands moving see-saw, to alter,
Of Ayar women with tresses fragrant and
Coins clanking in their necklace seedy;
Thou devilish lass, our chief, conceive;
As we sing Narayana moorthy Kesava
Shouldst thou lie-along well orient'd?
Lay open thou radiant
Listen and consider our damsel.
திருவெம்பாவை-பாடல் - 7
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோரும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பொருள்: பெண்ணே! உனது சிறப்புத்தன்மையில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால்
சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும் சிவனைப் போற்றுபவளே! திருநீறு, ருத்ராட்ச சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவசிவ' என்பவளே! "தென்னாடுடைய சிவனே போற்றி' என நாங்கள் சொல்லும் போது, தீயிலிட்ட மெழுகு போல் உருகி உணர்ச்சி வசப்படுபவளே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.இதையெல்லாம் கேட்டும், நீ இன்று உறங்குவதற்கு காரணம் என்ன? இனியவளே! இறுகிப்போன மனதுடன், இன்னும் எழாமல் இருக்கிறாயே! இந்த தூக்கத்தை ஒரு பரிசாக நினைக்கிறாயோ?
விளக்கம்: எத்தனையோ கிரகப்பெயர்ச்சிகள் வருகின்றன, போகின்றன. ஆனால், "நமசிவாய' மந்திரம் இருக்கும் போது நாளும் கோளும் என்ன செய்யும் என்று வாழ்வோரும் உண்டு. அந்த சிவனை மனதார நினைக்க உகந்த மாதம் மார்கழி. உறங்கும் இந்த பெண்ணைப் போல, நாமும் அதை தவற விடலாமா?

No comments:
Post a Comment