Wednesday, 28 December 2011

12. A girl whose brother doing 'Kainkaryam' to Krishna is awakened.

புதன் டிசம்பர்,  28, 2011

மார்கழி 12, கர வருடம்

திருப்பாவை-பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பசியால் வாடும் கன்றுகளை எண்ணிய எருமைகள், மடியில் சொரியும் பால் எங்கள் வீட்டு வாசல்களை சேறாக்குகிறது. இப்படி பெருமளவு பால் சொரியும் எருமைகளின் சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனியில், உன் வீட்டு வாசலில் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமான் நாராயணனின் பெருமையைப் பாடிக் கொண்டிருக்கிறோம். நீயோ, பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகு, உனக்கு மட்டும் ஏன் இந்த பேருறக்கம்?


விளக்கம்: "எனக்கென்ன ஆச்சு! நீ வேண்டுமானால் தூங்கு, நாங்கள் போகிறோம் கண்ணனைக் காண' என்று எந்த ஒரு பெண்ணும் கோபத்துடன் கிளம்பவில்லை. பொறுமையுடன் நீண்டநேரமாக காத்து நிற்கிறார்கள். பொறுமையும் ஒரு வகை வழிபாடே. பொறுத்தார் பூமியாள்வார் என்பது இப்பாடல் மூலம் வெளிப்படுகிறது.

திருவெம்பாவை-பாடல் - 12


ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!


பொருள்: தோழியரே! பிறவித்துன்பம் வராமல் தடுக்கும்
கங்கையைத் தலையில் கொண்டவனும், கையில் அக்னியுடன், சிதம்பரம் அம்பலத்தில் நடனமாடும் கலைஞனும், வானம், பூலோகம், பிற உலகங்களை காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான சிவனை, நம் கையில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வணங்குவோம்.இடுப்பிலுள்ள ஆபரணங்கள் ஒலி எழுப்ப, பூக்கள் நிறைந்த பொய்கையில் நீந்தி அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.


விளக்கம்: எதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம்? பிறவித்துயரம் அகலுவதற்கு தானே! அதற்கு என்ன வழி? கங்கையில் நீராடி பாவத்தை தொலைப்பது தான்! அங்கே போக காசில்லையே என்றால், இறைவன் நம் முன்னாலேயே நிற்கிறான், கங்கையை தலையில் சுமந்தபடி! அவனது திருவடியில் எல்லாவற்றையும் விட்டு விட்டு சரணடைந்தால், பிறப்பற்ற நிலை உறுதி.

Meaning:
The One with chaste water(river), whom we chant and dance in order to get rid of the roaring suffering of birth. The Fire Dancer at the tiny hall of nice thillai. Protecting, creating and removing this sky, world and all of us as a play, speaking the (sacred) words, the bangles tingling, the ornating snakes hissing, the bees buzzing on the decorated plait (He dances). Striking the (water in the) floral pond, praising the Golden Foot of the Lord, take bath in this nice water. 

No comments:

Post a Comment