Clock

Thursday, 29 December 2011

13. A girl with charming eyes, yet ego centric is awakened.

வியாழன் டிசம்பர், 29, 2011
மார்கழி 13, கர வருடம்

 

திருப்பாவை பாடல் - 13


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


பொருள்: பறவையாய் உருமாறி வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழித்தவன், ராவணனின் தலையைக் கொய்தவன் நம் நாராயணன். அவனது புகழைப் பாடியபடியே, தோழிகள் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர். கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து, வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் பாடுகின்றன. தாமரை மலர் கண்களையுடைய தோழியே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறி தெரிந்தும், குளிர்ந்த நீரில் நீச்சலடித்து நீராட வராமல் என்ன செய்கிறாய்? நல்மாதமான மார்கழியில் அவனை வணங்குவது சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்: "காலம் மாறி விட்டது என்று யாராவது சொன்னால், அதனை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில், நேரத்தை வீணடிப்பது ஒரு வகை திருட்டு என்கிறாள் ஆண்டாள். அதையே "கள்ளம் தவிர்ந்து' என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் காலத்தின் அருமையை உணர்த்தியுள்ளனர் நம் பெரியோர்.

Singing the glory of Him
       Who split the bird's bill and kill'd
    And Him who pluck'd the wicked demon as a weed;
       Girlies all reach'd the site of deity;
    Venus ascended and Jupiter, had slept sunk;
       Birds too clanged behold, belle gild:
    Thy eye, is a la flower or deer  flirting?
       Yet asleep in bed,
       Enjoin to dip and shiver in bath cold;
       Shed off thy stealth untold
       This  day is  auspicious, consider  our damsel.

திருவெம்பாவை பாடல் - 13


பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


விளக்கம்: தோழியே! நாம் குளிக்கும் குளத்தின் நடுவில் கரிய குவளை மலர்களும், சிவந்த தாமரை மலர்களும் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் மிதக்கின்றன. தங்கள் அழுக்கை களைய மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய' என்ற மந்திரத்தை மனதார சொல்கிறார்கள். இந்தக் குளம் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் ஒலிக்க, மார்புகள் விம்ம பாய்ந்து சென்று நீராடுவோம்.


விளக்கம்: குளத்திலுள்ள கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும், மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது கருத்து.

Meaning:
Because of the greeny dark kuvaLai flower, because of the fresh bud of the red lotus, because of the buzzing sound of the small-bodied creatures, this brimming pond appears, with the arrival and taking refuge of those who want to wash away their impurities, like our Lordess and our King. Jumping into this pond of lotus floral spring with our conches roaring, anklets clinging each other, breasts booming, bathing pond booming, swim in the pond. 

No comments:

Post a Comment