Wednesday, 21 December 2011

5. Cow girls eternally in crime. Could they succeed and achieve their objective?

புதன் ,டிசம்பர்,21, 2011

மார்கழி 5, கர வருடம்

திருப்பாவை-பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்: மாயக்காரனும், மதுராபுரியில் பிறந்தவனும், சுத்தமான வெள்ளமாய் பெருகியோடும் யமுனைக்கரையில் விளையாடியவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகியின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவனும், உரலில் தாம்பு கயிற்றால் கட்டப்பட்டதால் தாமோதரன் என பெயர் பெற்றவனுமான கண்ணனை, தரிசிக்க நாங்கள் நன்னீராடி, மணக்கும் பூக்களுடன் புறப்படுகிறோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே செய்த பாவங்களும், செய்கின்ற பாவங்களும் நெருப்பில் பொசுங்கிய தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்: எந்த நதியாயினும் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை "தூய பெருநீர் யமுனை' என்கிறாள் ஆண்டாள். நதிகளில் கழிவுநீரைக் கலக்கக்கூடாது. அவற்றை தெய்வமாய் போற்ற வேண்டும். அவ்வாறு செய்யும் நாட்டில் மட்டுமே தெய்வம் குடியிருக்கும். ஆறுகளைப் பாதுகாப்பதின் அவசியத்தை இந்தப்பாடல் மூலம், அன்றே வலியுறுத்தியிருக்கிறாள் ஆண்டாள்.

The elusive son of blooming North Mathura;
       Riverman de facto of grand Yamuna pure;
    Appear'd in Ayar tribe a glow lamp and
       Brought sanctity to mother's womb;
    If we reach pure, shower fine flower and
       Worship Him, Damodara the Lure;
    With song in lips, mind engross'd,
       The sins committed deliberate  or inadvertent
       In the past, present and future entire
       Shall be burnt a refuse in bonfire;
       Prithee, listen and consider, our damsel.

திருவெம்பாவை-பாடல் 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: ""வாசனைத் திரவியம் தடவிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான தோழியே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் வடிவெடுத்து சென்றும், நம் சிவனின் உச்சியையும், பாதங்களையும் காண முடியவில்லை. "மலை வடிவான நம் அண்ணாமலையார் நமக்குச் சொந்தமானவர் தானே!' என்று நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல...இவ்வுலகில் உள்ளவர்களாலும், தேவர்களாலும் அவரைப் பற்றி அறிய முடியாது. பெருமைக்குரிய அந்த நமசிவாயத்தை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ' என்று அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற,'' என்று தோழியை எழுப்புகிறார்கள்.

விளக்கம்: ""நம் ஊரில் தானே கோயில் இருக்கிறது. சுவாமி எங்கே போகப் போகுது! இங்கே தானே இருக்கும்! அவர் நம்ம சுவாமி தானே! நாளைக்குப் போகலாம் அவரைத் தரிசிக்க'' என்று சொல்லும் அதிகாரம் நம்மிடமில்லை. ஏனெனில், நாளை என்பது நம்மிடம் இல்லை. அது அவன் கையில்! எனவே, இன்றே இப்போதே வழிபாடு செய்து விடுங்கள் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

No comments:

Post a Comment