Friday, 30 December 2011

14. Though promised earlier to arouse all, this girl is blamed.

வெள்ளி டிசம்பர்,30, 2011
மார்கழி 14, கர வருடம்திருப்பாவை
பாடல் - 14


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பின் காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பொருள்: நாளை காலையில் முன்னதாகவே வந்து உங்களை எழுப்புவேன் என்று வீரம் பேசியவளே! சொன்ன சொல் தவறியதற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர் மலர்ந்தும், ஆம்பல் தலை கவிழ்ந்தும் விட்டது. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, சங்கு முழக்க சென்று கொண்டிருக்கின்றனர். சங்கும் சக்கரமும் ஏந்திய வீரமிக்கவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனை வணங்க, இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்: ஒன்றைச் சொன்னால், அதை செய்தே தீர வேண்டும். வாக்குறுதி கொடுப்பதும், பிறகு ஒன்றுமே தெரியாதது போல் அப்பாவித்தனமாக நடிப்பதும் இறைவனுக்கு ஏற்புடையதல்ல என்பதும் இப்பாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

 In your backyard garden pond
        Lotus hath opened its petals benign;
     Lily hath closed its petals as a cone;
        Lo! Brick power hue attir'd
     White-toothed monks are afoot
        To trumpet conch in their temple divine;
     Vouched to arouse us, pompously you mouth
        Vivacious your tongue lassie unabashed;
        His eye is a la lotus; and arm a hillock fine
        Toting conch and wheel that shines.
        Arise, sing! Listen and consider, our damsel.
திருவெண்பாவை- பாடல் 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள்: காதணிகள் ஆட, தங்கநகைகள் ஆட, கூந்தல் ஆட, அக்கூந்தலில் சூடியுள்ளமலர்களை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவனின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லுங்கள். ஜோதி வடிவாய் காட்சி தரும் சிவனின் வீரச்செயல்களை பேசுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி கூறுங்கள். முதலும் முடிவும் இல்லாத இறைவனின் புகழ் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை விலக்கும், அவனது திருவடி சிறப்பு பற்றி பேசிக்கொண்டே நீராடுங்கள்.

விளக்கம்: மார்கழியில் கத்துகிற ஒலிபெருக்கி தேவையில்லை. "நமசிவாய' என்ற மந்திரம் நம் வாயில் இருந்து ஒலிக்க வேண்டும். காலையில் புனித நீராடும் போது, அந்த சிவனின் திருநாமங்களும், அவனது சிறப்புகளுமே நினைவுக்கு வர வேண்டும். மற்ற சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்தால் தான், புனித நீராடலின் முழுபலனும் கிடைக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது.
Meaning:
The earring dancing, worn ornaments dancing, the Lady's plait dancing, the crowd of gasps dancing, bathing in the chill water, singing the Tiny Hall, singing the Meaning of vEdhAs, singing the Being of that, singing the nature of the Luminance, singing the enclading bunch of flower konRai, singing the nature of the Source, singing the Being of the end, singing the nature of the foot of the Lady who brought us up, bathe. 

No comments:

Post a Comment