Thursday 22 December 2011

6. Awakening a mate who is new for Bhagwath matter.

வியாழன்,   டிசம்பர்,  22,  2011

மார்கழி  6, கர வருடம்

திருப்பாவை - பாடல் - 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்!
 பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்: தோழியே! உடனே எழு! பறவைகள் கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் கோயிலில் வெண்சங்கு எழுப்பும் ஓசை கேட்கவில்லையா? தன்னைக் கொல்ல வந்த பூதனையிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைக் குடித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடனின் உயிரைப்பறித்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி' என்று அழைக்கும் குரல் உனக்கு கேட்கிறதா! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.


விளக்கம்: காலையில் எழுந்ததும் "ஹரி ஹரி' என ஏழுமுறை சொன்னால், செய்த பாவமெல்லாம் தீர்ந்து போகும். அதையே மார்கழியில் சொன்னால், பரமபதத்தையே அடைந்து எம்பெருமானின் திருவடி நிழலில் பரமானந்தமாக வாழலாம் என்கிறாள் ஆண்டாள்.

Behold! Birds clanged; whitish conch
       At the abode of eagle's king is blaring;
    Won't thou listen? Lassie arise!
       Poison, He sucked from devil' s breast
    Kicked deftly the treacherous cart, to a shatter
       On the serpent alighted in ocean had set sleeping;
    Kept this seed in mind, monks and yogis
       Arise gently and Hari they mumble;
       This  chant pierces the mind as a rumble;
       Awakens and enthuses like a roar to assemble
       Listen and consider, our damsel.

திருவெம்பாவை - பாடல் - 6
மானே நீ நென்னலை நாளை வந்து எங்களை
நானே எழுப்புவன் என்றாலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவறியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து
ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு
உன் வாய் திறவாய்
ஊனே உருவாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


பொருள்: மான் போல் நடப்பவளே! நேற்று நீ எங்களிடம், "உங்களை நானே அதிகாலையில் எழுப்புவேன்' என்று பெருமை அடித்தாய். ஆனால், உறங்கி விட்டாய். உன்னையே நாங்கள் வந்து எழுப்பும்படியாகி விட்டது. உன் வாக்குறுதி போன திசை எங்கே? சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்படுகிறாயா? தேவர்கள் உள்ளிட்ட யாராலும் அறிய முடியாத பெருமையுடைய சிவனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கும், எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்தாலே உடலும் உள்ளமும் உருகி விடும். உனக்கு அந்த உருக்கம் ஏற்படாதோ? உடனே எழு. எல்லோருடனும் இணைந்து நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.


விளக்கம்: வாக்குறுதி கொடுப்பதை விட, அதை நிறைவேற்றுவது மிக மிக முக்கியம். இல்லாவிட்டால், சமுதாயத்தில் அவப்பெயர் தான் ஏற்படும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

 

No comments:

Post a Comment