Sunday 1 January 2012

16. Requesting the guard of the temple to open the doors

ஞாயிறு ஜனவரி,1, 2012
மார்கழி 16, கர வருடம்

 om namo narayana 
 HAPPY NEW YEAR 2012

திருப்பாவை
பாடல் - 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்@கலோர் எம்பாவாய்.

பொருள்: எங்கள் தலைவர் நந்தகோபனின், தோரணம் கட்டிய அரண்மனையைப் பாதுகாப்பவனே! ஆயர்குல பெண்களான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திற. மாயங்கள் புரிபவனும், கருமை நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு அருள் செய்வதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதற்காக தூய மனதுடன் வந்துள்ளோம். அவனை எழுப்பும் பாடல்களை பாட உள்ளோம். "முடியாது' என முதலிலேயே சொல்லி விடாதே. எங்களுக்காக கதவைத் திற.

விளக்கம்: "தூயோமாய் வந்தோம்' என்கிறாள் ஆண்டாள். கண்ணனை வணங்க பூ, பழம் இவற்றையெல்லாம் கொண்டு செல்வதால் பயனில்லை. அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய மனதை! அதையே ஆயர் குல பெண்கள் கொண்டு சென்றனர். நாமும் தூய மனதுடன் கோயிலுக்குச் செல்வோம்.

 Thou guarding the temple of Nandagopala -
         Who is supreme of our clan;
     Guard of entrance with flag staff ostensive
         And festoon suspended across;
     Open latch of jewel-studded door;
         The Elusive, gem colour'd had plan;
     Vouched yesternight Ayarpadi lass, the drum to knock;
         We've come immaculate to pray arouse;
         Thou shalt not postpone and pronounce
         Open the lovely, befit door at once;
          Listen and consider our damsel.


திருவெண்பாவை
பாடல்-16
முன்னிக்கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பொருள்: கடல் நீரை குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள், சிவனின் தேவியான பார்வதியைப் போல் கருத்திருக்கின்றன. அவளது சிறிய இடை மின்னல் போல் வளைந்திருக்கிறது . எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள சிலம்புகள் எழுப்பும் ஒலி போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைத்திருக்கிறது. எங்களை ஆட்கொண்டவளும், சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு அருள் சுரப்பாள். அவளது அருள் மழை போல், மழையே! நீயும் விடாமல் பெய்வாயாக.

விளக்கம்: நீரின்றி அமையாது உலகு. நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இறைவனுடனும், அம்பாளுடனும் நீர் நிலைகளை ஒப்பிட்டிருக்கிறார் மாணிக்கவாசகர். இடி, மின்னல், அம்பாளின் அருள் ஆகியவற்றை சலங்கை, இடை, மழை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
 Meaning:
Earlier raising condensing the sea, appearing like the Lordess, shining and booming like the waist of Her who rules us, clinging like the clings of the golden anklet over the foot of our Lordess, appearing as a bow like Her eyebrow, like the grace She comes forward and gives first to the lovers of our Lord who is inseparable from Her who enslaved us, shower, Oh rain ! 

No comments:

Post a Comment