Monday 16 January 2012

அதர்மத்தை அழித்து, தர்மத்தை அளிக்கும் சிங்கர்குடி உக்கிர நரசிம்மர்

அதர்மத்தை அழித்து, தர்மத்தை அளிக்கும் சிங்கர்குடி  உக்கிர நரசிம்மர்


ம் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அனைத் தையும் அளந்து விடலாம். எல்லாவற்றிற்கும் ஓர் அளவுகோல் உண்டு. ஆனால்... நம்மால் அளவிட முடியாத ஒன்று இவ்வுலகில் உண்டு. அது என்ன? 
அதுவே தெய்வங்களின் இறையருளாகும். 

இறையருளில் கலந்திருப்பது அன்பு... 

அன்பு... அன்பு... அளவற்ற அன்பு, அளவற்ற கருணை, அளவற்ற சக்தி... அளவற்ற ஆற்றல்! இவ்விதம் அனைத்திலும் அளவில்லாத இறைவனின் அருள், இருள் நீக்கும் ஒளியாகச் செயல்படுகிறது. 
 
தீயவன் நல்லவனாகவும், வறியவன் வளம் கொழிக்கும் செல்வந்தனாகவும், நோயாளி திடகாத்திரமான ஆரோக்யசாலிலியாகவும், கல்விஅறிவு இல்லாதவன் உயர்கல்வியைப் பெற்று சிறந்த கல்வியாளனாகவும், ஏன்... கவிஞனாகவும்கூட ஆகிறான்- தெய்வங்களின் சக்தியால்.

தீமைகளை அழித்து நல்லன அளிப்பது தெய்வசக்தி. மனிதர்களின் ஆணவம், அகம் பாவம்... இன்னும் பற்பல துர்க்குணங்களை அழித்து, அவனை நல்ல மனிதனாக மாற்று வதும் இறைசக்தி!

திருந்தக் கூடியவர்களைத் திருத்துபவன் அவன்! திருந்த மறுப்பவர்களை அழித்துவிடக் கூடியவனும் அவனே. அத்தகைய வலிலிய சக்தி கொண்ட தெய்வம் எது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அவன்தான் சிம்மன்... நரசிம்மன்! மனித உருவமும் சிங்க முகமும் கொண்ட சிங்கமுகப் பெருமாள் நரசிம்மன்!

நரசிம்ம தெய்வத்திற்குப் பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் உக்கிர மூர்த்தியாக ஸ்ரீபக்த பிரகலாதனுக்குக் காட்சி அளித்த ஸ்தலம் சிங்கர்குடி என்று அழைக்கப்படும் தலமாகும்.

நாராயணனின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம்! "நாராயணன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்' என்று தந்தை ஹிரண்யனிடம் வாதிட்டவன் பிரகலாதன்! தீய இயல்பு கொண்ட ஹிரண் யனை ஆக்ரோஷமாகப் பிளந்து அவனை அழித்தவர் நரசிம்மர். அவர் அழித்தது ஹிரண்யனைத்தான் என்றாலும், அதன் பின்னணியை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அதர்மம், அதர்த்தம், அசத்தியம், அமோட்சம் ஆகிய துர்க்குணங்களை அழிப்பதுதான் உக்கிர நரசிம்மரது ஹிரண்ய வதம் வெளிப்படுத்தும் தாத்பர்யம்.

அர்த்தம் என்பது வாழ்க்கையின் அர்த் தங்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் வேதங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுதல் ஆகும். மோட்சம் என்பது- தர்மத்தைப் போதிப்பது, பிறருக்கு உதவி செய்வது ஆகியவையாகும்.

சாஸ்திரங்களை மீறி- அவற்றை அலட்சியப்படுத்தி, அவரவர் மனம் போன போக்கில் தெய்வ வழிபாட்டில் ஈடுபடக்கூடாது. 

அதாவது ஒருவன், "நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன். மூன்று வேளையும் மூக்கு முட்ட உணவு உட்கொள் வேன். வீட்டிலேயே உட்கார்ந்து ஸ்வாமி நாமங்களைக் கூறிக் கொண்டிருப்பேன். நான்தான் சிறந்த பக்தன்' என்று சொல்லிலி மோட்சத்தை எதிர்பார்த்தால் அது கிடைக் குமா? "நான் நாம சங்கீர்த்தனம் மட்டுமே செய்து வாழ்வேன். இறைவனை வழிபடுவேன்' என்று முடிவு எடுப்பவன், என்றோ ஒரு நாள் மட்டுமே உணவு உட்கொண்டு, மற்ற அனைத் தையும் விட்டு விட்டு... பற்றுதலை இற்றுப் போக வைத்துவிட்டு, நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.

நரசிம்மருக்கு பத்து ரூபாய்க்கு பூ அல்லது பழம் மட்டுமே வாங்கக் கூடிய பண வசதி உள்ளவன், கடன் வாங்கி இருநூறு ரூபாய் செலவு செய்து நரசிம்ம ருக்குக் கைங்கர்யம் செய்தால் அது அதர்மம். இருநூறு ரூபாய் செலவு செய்யக் கூடியவன், கடவுளுக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் இதுவும் அதர்மம்
 
அதர்மத்தை அழிக்கும் எண்ணத்தில்தான், நரசிம்மர் ஹிரண்யனை அழித்தார். ஹிரண்யனை அழிக்கும் உக்கிர மூர்த்தியாக நரசிம்மரைத் தரிசித்து வணங்குவதற்கு சிங்கர்குடி நரசிம்மர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.

சிங்கர்குடி நரசிம்மர் ஆலயத்தின் கோபுரம் பற்பல வண்ணச் சிற்பங்களைக் கொண்டதாக மிக அழகாக இருக்கின்றது. உள்ளே நுழைந்த தும், இடது பக்கம் கனக துர்க்கையின் சந்நிதி உள்ளது. வலது பக்கம் நாகர், குங்கும அபிஷேகம் செய்யப்பட்ட கோலத்தில் இருக் கிறார். இக்கோவில் பல்லவ அரசர்களால் கட்டப்பட்டது. பல்லவர்கள் அரசாண்டு வந்த காலத்தில் மன்னர்களும், போர் வீரர் களும் கனக துர்க்கையை வழிபட்ட பின்னரே, கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

உக்கிர நரசிம்மரின் கருவறைக்குச் செல்லும்பொழுது, நாம் விநாயகர் என்று அழைக்கும் தும்பிக்கை ஆழ்வார், இங்கு வாசிஷ்ட விநாயகர் எனும் நாமம் கொண்டு தனிச் சந்நிதியில் காட்சி அளிக்கிறார்.

இவரை வணங்கிவிட்டு, கொடி மரத்தின்முன் நின்று வணங்கிய பிறகு, கருடாழ்வாரை வணங்கி, அதன்பின் உக்கிர நரசிம்மரைத் தரிசனம் செய்ய மனம் துடிக்கின்றது.

கோபம் பொங்கிய உக்கிரமான உருவில் காட்சி அளிக்கும் நரசிம்மரைப் பார்க்க, உடல் புல்லரிக்கின்றது. இவரது பதினாறு கைகளில் எட்டு கைகள் நமக்குப் பல பாதுகாப்புகளை வழங்கும் ஆயுதங்களான சங்கு, சக்கரம், குறுவாள், பதாகஹஸ்தம், சூலம், வில், கதை, கேடயம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியுள் ளன.

மற்ற எட்டு கைகளில் ஒரு கை ஹிரண்யனின் தலையை அழுந்தப் பிடித்துள்ளது. மற்ற கைகள் ஹிரண்யனின் குடலைக் கிழிப்பதும், அவனது தலையைக் கிள்ளி எறிவதுமான தீயவனை அழிக்கும் செயல்களைப் புரிகின் றன.

உக்கிர நரசிம்மரின் அந்தக் காட்சியைக் காணும்பொழுது நம் வாழ்வில் ஏற்படும் தீமைகள், துன்பங்கள், துயரங்கள் ஆகிய வற்றையும் அழித்து, நல்வாழ்வு அளிக்கும்படி நம் இதயத்தில் வேண்டுதல் தோன்றுகிறது.

நரசிம்மரைத் தரிசனம் செய்தபிறகு வெளிப்பிராகாரத்தில் அழகிய வண்ண வேலைப்பாடுகள் செய்த தூண்களால் தாங்கப்படும் மண்டபத்தில், தனிச் சந்நிதியில் கனகவல்லிலித் தாயார் மிகமிக அழகாக வீற்றுள்ளாள். "கனகவல்லிலித் தாயாரே... கனகத்தை அள்ளிக் கொடு தாயே... நோயற்ற வாழ்வு எனும் குறைவற்ற செல்வத்திற்கு ஈடான கனகத்தை அள்ளிக் கொடு தாயே' என்று மனம் வேண்டுகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தாயாரை ஊஞ்சலிலில் அமர்த்தி விழாக்கோலம் நடக்கிறது. உக்கிர நரசிம்மப் பெருமாளின் உற்ற துணைவியான கனகவல்லிலித் தாயாரின் அழகிய வடிவம் கண்டு இவ்வுலகே மறக்கிறது.

தாயாருக்கு இடது பக்கம் உள்ள ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சனேயர் சந்நிதியில் "ஹரே ராம ஹரே ராம' எனும் நாம சங்கீர்த் தனம் ஒலிலித்தபடி உள்ளத்தில் ஒளியூட்டியது.

பிரதோஷத்தன்று நரசிம்மருக்கு விசேஷ பூஜையும் அபிஷேகமும் நடைபெறும். வெளிப்பிராகாரத்தில் கோதை நாச்சியார் எனும் நாமம் கொண்ட ஆண்டாள் வீற்றுள் ளாள். "ஆண்டாளம்மா! துன்பங்கள் இனி வேண்டாமம்மா' என்று வேண்டிக் கொள்ள மனம் விழைகிறது. மிகச் சிறந்த பிரார்த்தனை தலமான சிங்கர்குடி உக்கிர நரசிம்மர் சந்நிதியில் பிரார்த்தித்துக் கொண்டால், நமது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும். மனிதப் பிறவிகளான நமது பிரார்த்தனைகள் மட்டுமல்லாமல், புராண காலத்து மகான் களான வசிஷ்டர், ஜமதக்னி முனிவர், பிருகு முனிவர், இந்திரன், சுக்கிரன், பிரகலாதன் ஆகியோரின் பிரார்த்தனைகளையும் ஈடேற்றி யிருக்கிறார் என்கிறது தல வரலாறு.

தீமைகளையும் தீயவர்களையும் அழிக்கும் நரசிம்மர், நல்லவர்களுக்கு நலம் அளித்து நன்மைகள் புரிகிறார். எனவே பிறருக்குத் தீங்கிழைக்காமல் வாழ வேண்டும். அகம் பாவம், ஆணவம், அநியாய நடவடிக்கைகள் ஆகியவை அழிவைத்தான் அளிக்கும் என்பதை புராண காலத்தில், ஹிரண்யனை வதம் செய்து பாடம் புகட்டினார் உக்கிர நரசிம்மர்.

அந்தக் கோலத்தை சிங்கர்குடியில், தன்னை நாடி வரும் அனைவருக்கும் காட்டி, நன்மைகள் மட்டுமே செய்யும்படி நமக்கு வலிலியுறுத்துகிறார் நரசிம்மர்.

இவரது சீற்றம் நம்மை சீர்படுத்தவே என்பதைப் புரிந்து கொண்டு, நரசிம்மர் பாதம் பணிந்து வேண்டுவன யாவும் பெற்று வாழ்வோம்.

சிங்கர்குடி நரசிம்மர் கோவில், கடலூர்- புதுச்சேரி பாதையில் தவளக்குப்பம் எனும் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலை வில் உள்ள சிங்கர்குடி எனும் இடத்தில் உள்ளது.
 

No comments:

Post a Comment