Friday 13 January 2012

28. The only virtue the girls possess for the claim is His birth among the cowherds.

வெள்ளி ஜனவரி 13, 2012

மார்கழி 28, கர வருடம்

திருப்பாவை :பாடல் - 28கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆ#க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்: குறை இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்ப்பவர்கள். இணைந்து அமர்ந்து உண்பவர்கள். எங்களது அறிவு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுண்டம் உறுதிஎன்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம். உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றிஎல்லாம் எங்களுக்குத்தெரியாது. "கண்ணா! மணிவண்ணா! கருணாகரா!' என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைக்கிறோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.


விளக்கம்: விரதத்தில் பழுது ஏற்பட்டு விட்டால், மனம் வருத்தப்படுகிறது. ஆனால், விரதம் இருக்கும் முறை ஆயர்களுக்கு தெரியாது. ஆனால், ஒன்றே ஒன்று தெரியும். அது தான் "கண்ணா' என்ற திருநாமம். அதை நிஜமான பக்தியுடன் சொன்னார்கள். வைகுண்டத்தை அடைந்தார்கள். விரதத்தை விட பக்தியே முக்கியம் என்பதை ஆண்டாள், இப்பாடல் மூலம் தெளிவுபடுத்துகிறாள்.

Milk-cows we would follow, reach the wood and eat,
        Amongst tribe pastoral, sans any intellect, Thou'rt born
     This the only virtue we own; our acquaintance is a bond;
        The intimacy hither, could never be torn;
     Oh! Govinda! Deficient in nothing!
        We girls ignorant and forlorn
     Addressed Thee in unbecoming names;
        Let Thou not hiss! Lo! Master!
        Bless us, we in ardour
        Bestow on us our desire,
        Listen and consider, our damsel.

திருப்பள்ளியெழுச்சி :பாடல் - 8


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்மூவரும்
அறிகிலர் யாவர் மற்றறிவார்பந்தணை விரலியும்
 நீயும் நின்னடியார்பழங்குடில் தொறும் எழுந்தருளிய
 பரனே!செந்தழல் புரை திருமேனியும்
காட்டித்திருப்பெருந்துறையுறை கோயிலும்
காட்டிஅந்தணன் ஆவதும் காட்டி
வந்தாண்டாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: என்னை ஆட்கொண்டவனே! அமுதமான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தவன், எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? நீ நெருப்பாக நின்று உன் வடிவத்தைக் காட்டினாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணர் வேடத்தில் வந்து ஆட்கொண்டாய். சிறப்புகளை உடையவனே! துயில் எழுவாயாக.

விளக்கம்: சிவனை விட உயர்ந்த தெய்வம் வேறில்லை என்று இப்பாடல் மூலம் சொல்கிறார் மாணிக்கவாசகர். இறைவனுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லை என்பதால், அவன் பழைய குடிசைகளுக்குக்கூட வருவான் என்ற அடிப்படையில் "பழங்குடில்' என்ற வார்த்தையைக் கையாண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment