Sunday 8 January 2012

23. Krishna is requested to sit down on a throne and inquire about their grievances.

திருப்பாவை- பாடல் - 23


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திலிருந்து, யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொருள்: மழைக்காலத்தில் மலையில் உள்ள குகையில் உறங்கும் வீரம் மிக்க சிங்கம், கண்களில் நெருப்புப்பொறி பறக்க, நாற்புறமும் நடமாடி, பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புவது போல, காயாம்பூ நிறத்தைஉடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு வெளியே வருவாயாக. மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கு வந்தோம் என்பதைக் கேட்டு, கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்: இறைவனிடம் கோரிக்கை வைப்பது நமது உரிமை. அந்த கோரிக்கை நியாயமானதாக நம் மனதுக்குப் படலாம். ஆனால், இறைவன் அதை வேண்டாம் என நினைத்து விட்டால் நமக்கு கிடைப்பதில்லை. எனவே, அவனிடம், ""நீ என்ன தர விரும்புகிறாயோ, அதைக் கொடு,'' என பிரார்த்திக்க வேண்டும். அதை அவன் ஆராய்ந்து அருளுவான்.

As would a fierce lion in a mountain den Stay along in winter, lie asleep gang with, Enlighten'd, open eye, emit fire, mane erect Stretch in all direction; Oh! Bilberry-hued; Thou shalt roar! Start with a bang, This ward move from Thy temple forthwith, Settle on carved out throne exquisite, We have come unto Thee to woo; Ponder over our requisite; Bestow grace, the desire implicit Listen and consider, our damsel.

திருப்பள்ளியெழுச்சி-பாடல் - 3

கூவின பூங்குயில், கூவின கோழி
குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறி கழல் தாளிணைக்காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்! எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! சூர்யோதத்தை அறிவிக்கும் வகையில் குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகள் கீரிச்சிடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

விளக்கம்: சூரியன் உதித்து விட்டால், நட்சத்திர ஒளி அதனுடன் ஒன்றிப்போய் விடுகிறது. அதுபோல், நம் மனம் இறைவனுடன் ஒன்றிப் போய் விட வேண்டும். இதுவே நிஜமான பக்தி என்பதை இந்தப் பாடல் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment